BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பீஸ்ட் பட நடிகை.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்துள்ள அயலான் திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸாக உள்ளது. சயின்ஸ் பிக்சன்ஸ் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். எந்த திரைப்படத்தை ஸ்பைடர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.