"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
சிம்புவுக்கு ஜோடியாகும் பீஸ்ட் பட நடிகை.. வெளியான அசத்தல் தகவல்!
சிம்புவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. தற்போது இவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்துக்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்துக்காக சிம்பு நீளமாக முடி வளர்த்து கெட்டப்பை மாற்றியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து விரைவில் இந்த படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவோடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பிப்ரவரி மாத இரண்டாம் வாரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படக்குழு கீர்த்தி சுரேஷ் மற்றும் தீபிகா படுகோன் என முயற்சி செய்த நிலையில், தற்போது சிம்பு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.