சினிமா

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடி இவர்தானா? உண்மையை உடைத்த பிரபல நடிகை! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Summary:

மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமா

மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் சினிமாவுலகில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அவரது கைவசம் தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா போன்ற படங்கள் உள்ளன. இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

Pooja Hegde donates Rs 2.5 lacs to kids with cancer | Celebrities News –  India TV

இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த பூஜா ஹெக்டே, நான் தமிழ் படத்தில் தான் முதலில் அறிமுகமானேன். எனவே மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக காத்துள்ளேன். விஜய்யுடன் நடிக்க  நான் ஆர்வமாக உள்ளேன். இப்படத்தின் மூலம் அது நடந்தால் மிகவும் மகிழ்ச்சி. அந்த வாய்ப்புக்காக நான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
 


Advertisement