சினிமா

அடேங்கப்பா..நயன்தாராவையே மிஞ்சிடுவார் போல! கிடுகிடுவென உயர்த்திய தளபதி 65 படநடிகை!!

Summary:

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற படத்தில் நடிகர்

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் 30 லட்சம். ஆனால் இப்படம் சொல்லிக்கொள்ளுமளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.

அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும்அவர் பிரபலமான நடிகையாக வலம் வரத் துவங்கினார். இந்த நிலையில் பூஜா ஹெக்டே தற்போது தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். அது மட்டுமின்றி அவருக்கு தெலுங்கில் இரு படமும், பாலிவுட்டில் இரு படமும் கைவசம் உள்ளதாம்.

இவ்வாறு தற்போது தனக்கு மார்க்கெட் அதிகரித்து வரும் நிலையில் பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சம்பளத்திற்கு இணையானது எனவும் கூறப்படுகிறது.


Advertisement