அய்யோ.. போச்சே! அந்த சூப்பர்ஹிட் பட வாய்ப்பை தவறவிட்டு, புலம்பி தள்ளும் நடிகை பூஜா ஹெக்டே!!

அய்யோ.. போச்சே! அந்த சூப்பர்ஹிட் பட வாய்ப்பை தவறவிட்டு, புலம்பி தள்ளும் நடிகை பூஜா ஹெக்டே!!


pooja-hegde-feel-for-missing-seetha-ramam-movie

தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'முகமூடி' படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்பு எதுவும் வராத நிலையில் தெலுங்கு சினிமாவில் நடித்தார். பின்னர் பூஜா ஹெக்டே பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. பிரபாஸுடன் அவர் நடித்த ராதே ஷ்யாம் திரைப்படமும் ஹிட்டாகவில்லை. இதற்கிடையில் பூஜா ஹெக்டேவிற்கு சீதா ராமம் என்ற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.

Pooja hegde

ஆனால் அப்பொழுது அவரால் நடிக்க முடியாமல் போகவே அவருக்கு பதிலாக மிரினல் தாக்கூர் என்பவர் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது சீதா ராமம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் ஹீரோயின் மிரினல் தாக்கூர்க்கும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே அப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தால் இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன். இனி அப்படி ஒரு வாய்ப்பு வருவது கடினம்  என நண்பர்களிடம் புலம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.