சினிமா

அடஅட.. அம்மணி கலக்குறாரே! நடுகடலில் செம ஆட்டம் போட்ட பீஸ்ட் நாயகி! அதுவும் எந்த பாடலுக்கு பார்த்தீங்களா!! வீடியோ இதோ!!

Summary:

அடஅட.. அம்மணி கலக்குறாரே! நடுகடலில் செம ஆட்டம் போட்ட பீஸ்ட் நாயகி! எந்த பாடலுக்குனு பார்த்தீங்களா!!

விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’  காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகி இணையத்தையே தெறிக்க விட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் மற்றும் ஜோனிதா பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது. மேலும் பிரபலங்கள் பலரும் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டே தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளாராம். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் நடுக்கடலில் கப்பலில் அரபிக்குத்து பாடலுக்கு செம ஆட்டம் போட்ட வீடியோவை தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்


Advertisement