அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
இந்த குட்டி குழந்தை விஜய் பட நடிகையா.? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..
தென்னிந்தியா சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

தமிழில் விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். தனது நடிப்பு திறமையாலும், அழகினாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் பூஜா ஹெக்டே.
தற்போது தெலுங்கு மொழி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை கவர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.

இது போன்ற நிலையில் தற்போது பூஜா ஹெக்டேவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பூஜா ஹெக்டேவா இது? இவ்வளவு க்யூட்டா இருக்கிறார்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.