பிராமண்ட படைப்பான பொன்னியின் செல்வன் ரிலீஸ் எப்போ? வெளியான சூப்பர் தகவல்! ஹேப்பியான ரசிகர்கள்!!Ponniyin swlvan update released

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும்  இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ரூ800 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது. பின்னர் கொரோனா ஊரடங்கால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

ponniyin selvan

இந்த நிலையில் தற்போது கொரோனோ இரண்டாவது அலை தீவிரமாக பரவும் நிலையில், மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும், படம் வரும் 2022 பொங்கலை முன்னிட்டு  வெளியாகலாம் என தகவல்கள் பரவி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.