வாவ்... சூப்பர் அப்டேட்ஸ்...ரிலீஸ் தேதியுடன் செம மாஸாக வெளிவந்த பொன்னியின் செல்வன் போஸ்டர்ஸ்...

வாவ்... சூப்பர் அப்டேட்ஸ்...ரிலீஸ் தேதியுடன் செம மாஸாக வெளிவந்த பொன்னியின் செல்வன் போஸ்டர்ஸ்...


Ponniyin Selvan movie first look poster released

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, லால், பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வரும்  இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். ரூ800 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டு தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது.

ponniyin selvan

இந்நிலையில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது இப்படத்தினை 30.9.2022  அன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.