இந்தியா சினிமா

சத்யராஜுக்கு ஜோடி ஐஸ்வர்யாராயா! தமிழ், பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் நடிக்க பிரமாண்டமாக உருவாகும் புதிய படம்.!

Summary:

ponnien selvan - director manirathnam - new tamil movie

புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் புகழ் வாய்ந்த வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன். இந்த புதினத்தைத் தழுவி இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் திரைப்படமாக எடுக்க உள்ளார். மிகப்பெரிய வரலாற்று புதினமாக இருப்பதால் இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

சுமார் 800 கோடி பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக இப்படத்தை உருவாக்க லைக்கா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 60 பிரதான கதாபாத்திரங்கள் உள்ள இப்புதினத்தை திரைப்படமாக எடுக்க தற்போது ஸ்கிரிப்ட் விவாதம் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் தேர்வாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், கீர்த்தி சுரேஷ் அல்லது நயன்தாரா நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள். இப்படத்தின் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் முன்னணி இயக்குனர் பாரதிராஜாவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


Advertisement