விஜே சித்ரா மரணத்தில் முக்கிய அரசியல் தலைவருக்கு தொடர்பு! பகீர் கிளப்பும் கணவர் ஹேமந்த்!!

விஜே சித்ரா மரணத்தில் முக்கிய அரசியல் தலைவருக்கு தொடர்பு! பகீர் கிளப்பும் கணவர் ஹேமந்த்!!


political-leader-is-a-reason-for-vj-chitra-dead

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களால் ரசிக்கப்பட்டு பிரபலமடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனது கணவருடன் தங்கியிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது மரணம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அதனை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். பின்னர் சில மாதங்களில் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில் தற்போது ஹேமந்த் சித்ராவின் மரணத்திற்கு முக்கிய அரசியல்வாதிதான் காரணம் எனவும், அவரால் தனது உயிருக்கும் ஆபத்து எனவும் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், நானும், எனது மனைவி சித்ராவும் அன்னியோன்யத்துடன் இல்லற வாழ்வை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். இது சின்னத்திரை பிரபலங்கள் பலருக்கும் தெரியும். எனது மனைவி தற்கொலை செய்து கொண்ட போதே நானும் எனது வாழ்வை முடித்துக்கொள்ள எண்ணினேன். ஆனால் என் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக என் மீது சேறு இறைத்துள்ளனர். நான் குற்றமற்றவன் என நிரூபிக்கவே இன்னும் உயிருடன் இருக்கிறேன்.

விஜி chitra

என்னுடைய மனைவியின் தற்கொலைக்கு பின் பணபலமும், அரசியல் பலமும் கொண்ட மாபியா கும்பல் உள்ளது. அவர்களால் எனது உயிருக்கு பெரும் ஆபத்து உள்ளது. நான் உயிருக்கு பயந்து மற்றொரு இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளேன். என்னுடைய உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், என் மனைவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்தவர்கள் பெயர்கள் குறித்த விவரங்கள் வெளிவரும் எனக் கூறியுள்ளார்.