கால் டாக்ஸியில் வழி மாறிய அஜித்! ரவுண்டு கட்டிய ரசிகர்கள்! சுவாரஷ்ய சம்பவம்!

கால் டாக்ஸியில் வழி மாறிய அஜித்! ரவுண்டு கட்டிய ரசிகர்கள்! சுவாரஷ்ய சம்பவம்!


Police guided Ajith to reach correct destination

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் துப்பாக்கி சுடுதலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் எழும்பூரில் உள்ள ரைபில் கிளப்பில் உறுப்பினராகவும் உள்ளார். அங்கு சென்னை காவல் ஆணையரின் பழைய அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில் அஜித் ரைபில் கிளப் செல்வதற்காக நேற்று கால்டாக்சி ஒன்றை புக் செய்து வந்துள்ளார். ஆனால் கூகுள் மேப் தவறாக வழி காட்டிய நிலையில் அவர் தற்போதுள்ள புதிய காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜீத் கீழே இறங்கி அங்குள்ள காவலரிடம் வழி கேட்டுள்ளார். முகத்தில் மாஸ்க் அணிந்திருந்த நிலையில், முதலில் அங்கிருந்தவர்களுக்கு யார் என தெரியவில்லை. பின்னர் அஜித்தை அடையாளம் கண்ட அப்பகுதியில் உள்ள ரசிகர்கள் மற்றும் காவலர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Ajith

பின்னர் போலீசார்கள் அஜித் இடம்மாறி வந்திருப்பதாக கூறி அவரை பழைய காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள ரைபில் கிளப்புக்கு  செல்ல வழிகாட்டியுள்ளனர். அதனை தொடர்ந்து நடிகர் அஜித் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.