சினிமா

இப்படியொரு மோசடியை செய்தாரா கழுகு பட நடிகர் கிருஷ்ணா! போலீசில் பரபரப்பு புகார்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

கழுகு படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக அவரது மேலாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கழுகு, யாமிருக்க பயமேன், வன்மம், வீரா, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கிருஷ்ணா. இவர் சென்னை கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் வசித்து வருகிறார்.இவரிடம் பல ஆண்டுகளாக திலீப்குமார் என்பவர் மேலாளராக  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தற்போது அசோக் நகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் நான்  நடிகர் கிருஷ்ணாவிடம் மேலாளராக பணிபுரிந்து வந்தேன். அப்பொழுது அவர் என்னிடம் தொழில் தொடர்பாக பணம் கேட்டார். அதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு ரூ.10.43 லட்சம் பணத்தை மூன்று தவணையாக கொடுத்தேன். ஆனால் பணத்தை வாங்கிய நடிகர் கிருஷ்ணா பல நாட்களாகியும் திரும்ப கொடுக்கவில்லை. அதற்கான வட்டியும் கொடுக்கவில்லை. மேலும் அவரிடம் பணத்தை பலமுறை  கேட்டும் அவர் சரியான பதிலளிக்கவில்லை. எனவே எனது ரூ.10.43  லட்சம் பணத்தை நடிகர் கிருஷ்ணாவிடம் வாங்கி தரவேண்டும் என கூறியிருந்தார். 

அதனை தொடர்ந்து போலீசார்கள் இதுகுறித்து நடிகர் கிருஷ்ணாவை தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர். அப்போது நடிகர் கிருஷ்ணா தான்  பொள்ளாச்சியில் ஷூட்டிங்கில் இருப்பதாகவும், நேரில் ஆஜராக 15 நாள் அவகாசம் அளிக்குமாறு கேட்டுள்ளாராம். மேலும் போலீசாரும் அவருக்கு அவகாசம் அளித்துள்ளார்களாம்.


Advertisement