அன்னபூரணி படக்குழுவினர் மீது போலீசார் வழக்கு பதிவு.. காரணம் என்ன?

அன்னபூரணி படக்குழுவினர் மீது போலீசார் வழக்கு பதிவு.. காரணம் என்ன?


police-complaint-against-annaboorani-movie-crew

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவருடைய நடிப்பில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் அன்னபூரணி. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்கியிருந்தார்.

Annaboorani

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, கே எஸ் ரவிக்குமார், பூர்ணிமா ரவி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட திரப்பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே அளவில் இந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகளும் எழுந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Annaboorani

அந்த வகையில் அன்னபூரணி பணத்தில் இந்துமத நம்பிக்கைகளை தவறாக காட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன், ஜதின் சேத்தி, புனித் கோயங்கா உள்ளிட்டோம் இது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.