கொலை மிரட்டல் விடுத்தார்.. நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது பரபரப்பு புகார்.! என்ன நடந்தது??police-complaint-against-actress-saranya-ponvannan

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சரண்யா. அம்மா கதாபாத்திரம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவர்தான். நடிகை சரண்யா பல முன்னணி நடிகர்களின் அம்மாவாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். இவரது கணவர் பொன்வண்ணனும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக உள்ளார்.

இந்த நிலையில் நடிகை சரண்யா மீது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஸ்ரீதேவி என்பவர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சரண்யா பொன்வண்ணன் சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் வசித்து வருகிறார்.

Saranya

அவரது வீட்டிற்கு அண்மையில் வசித்து வரும் ஸ்ரீதேவி என்பவர் தனது வீட்டின் 20 அடி நீள கேட்டை திறக்கும் போது அது நடிகை சரண்யாவின் காரை உரசுவது போல சென்றதாகவும், மேலும் அதனால் இரு தரப்பினருக்கு இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரச்சினை முற்றிய நிலையில்  நடிகை சரண்யா பொன்வண்ணன் குடும்பத்தினர் தங்களது வீடு புகுந்து கொலை மிரட்டல் விடுத்ததாக, சிசிடிவி வீடியோவை சமர்ப்பித்து ஸ்ரீதேவி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.