நண்பர்களுடன் சேர்ந்து விமல் செய்த வில்லங்கத்தால் அதிரடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார்!

நண்பர்களுடன் சேர்ந்து விமல் செய்த வில்லங்கத்தால் அதிரடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார்!


police-case-filed-on-vimal-for-attacking-kannada-hero

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகர் விமல். அதனைத் தொடர்ந்து அவர் தூங்காநகரம், எத்தன், வாகை சூடவா, கலகலப்பு, பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, புலிவால், மாப்ள சிங்கம், மன்னார் வகையறா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் வெயிலோடு விளையாடு, நேற்று இன்று ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் விமல் கன்னட நடிகர் ஒருவரை நண்பர்களுடன் இணைந்து தாக்கியதாக அவர்  மீது போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

vimal

கன்னட படங்களில் நடித்துள்ள அபிஷேக் என்ற நடிகர் தமிழில் அவன் அவள் அது என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் அப்பார்ட்மென்ட் ஒன்றில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு அப்பார்ட்மென்டின் நுழைவு வாயிலில் அமர்ந்திருந்த அபிஷேக்கிடம் தனது நண்பர்களுடன் வந்த நடிகர் விமல் தகராறு செய்து அவரை அடித்து கடுமையாக தாக்கியுள்ளார்.

vimal

இதில் அபிஷேக்குக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக அபிஷேக் விமல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து விமல் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் மீதும் போலீசார்  வழக்கு பதிவு செய்துள்ளனர்.