பெண்கள் பற்றி அப்படி லிரிக்ஸ் வைத்த கண்ணதாசன்.. கடுப்பாகி கட்டளை போட்ட முதலாளி.!

பெண்கள் பற்றி அப்படி லிரிக்ஸ் வைத்த கண்ணதாசன்.. கடுப்பாகி கட்டளை போட்ட முதலாளி.!



pointed-out-the-mistake-in-kannadasans-song-trsundaram

 தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் காலம் கடந்து நின்ற கவிஞர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் கவியரசு கண்ணதாசன். தன்னுடைய பாடல் வரிகள் மூலமாக வாழ்க்கையின் பல்வேறு தத்துவங்களை அவர் உணர்த்தினார். மனிதர்களிடையே ஏற்படும் அனைத்து விதமான உணர்ச்சிகளுக்கும் தன்னுடைய பாடல் வரிகள் மூலமாக பதிலளித்தார். சிவாஜி, எம்ஜிஆர் போன்ற பல முன்னனி கதாநாயகர்களுக்கு தன்னுடைய கற்பனை வளம் மூலமாக பல்வேறு ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

cinemaகவியரசு கண்ணதாசனை பற்றி இன்றளவும் திரையுலகம் பேசிக்கொண்டிருக்கிறதென்றால் அதற்கு முக்கியமான காரணம் மார்டன் தியேட்டர்ஸ் டி. ஆர். சுந்தரம் தான் என குறிப்பிடப்படுகிறது. கண்ணதாசன் கவிஞராக வேண்டும் என முயற்சி செய்தபோது, அவருக்கு முதன் முதலில் சினிமா வாய்ப்பை கொடுத்தவர்தான் டி.ஆர்.சுந்தரம். கவியரசோடு பணியாற்றிய மற்றவர்களை விடவும் இவருக்கு அதிக சம்பளம் கொடுத்தார் டி.ஆர்.எஸ் மேலும் கண்ணதாசன் மீது அவர் தனி பாசம் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

கண்ணதாசன்  இது தொடர்பாக  எழுதியுள்ளதாக அவருடைய மகன் அண்ணாதுரை ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், '33 வருடங்களுக்கு முன்னர் என்னை  மரியாதையோடு வரவேற்ற நகரம்தான் சேலம். அப்போது மாடர்ன் தியேட்டர்ஸ் முதலாளி டி. ஆர்.சுந்தரம் என்னை பத்திரிகை ஆசிரியராக ஏற்றுக் கொண்டார். அங்கிருந்து தான் என்னுடைய வாழ்க்கை ஆரம்பமாயிற்று.

cinemaபத்திரிகையிலிருந்து திரைக்கதை, பாட்டு என என்னை வளர்த்து விட்டது மார்டன் தியேட்டர்ஸ் தான். நான் மிகவும் பயபக்தியோடு முதலாளி என்றழைப்பது டி.ஆர்.எஸ் ஒருவரை தான். அவர் என்னிடம் காட்டிய அன்பையும் பாசத்தையும் வேறு யாரிடமும் நான் கண்டதில்லை. ஆங்கிலப் படிப்பை படித்ததாலோ என்னவோ, தமிழ் மீது அளவற்ற பக்தியும், வெறியும் டி.ஆர்.எஸ் க்கு உண்டு.

அந்த நாளில் எனக்கு ₹.125 சம்பளம் ஓ.ஏ.கே. தேவர், சீர்காழி கோவிந்தராஜன், கே.கே. சௌந்தர் எல்லோருக்குமே ₹.50 சம்பளம். அதிலிருந்து படிப்படியாக என்னை உயர்த்தினார் முதலாளி. இல்லற ஜோதிக்கு கதை, வசனம், பாடல்கள் நான் எழுதினேன். அப்போது டால்மியாபுரம் வழக்கு நடந்து கொண்டிருந்தது. முதலாளி லண்டன் போயிருந்தார். நாங்கள் கதையை எழுதி படத்தை முடித்து விட்டோம்.

அதிலே கதாநாயகன் கல்யாணமான ஒரு கவிஞன். இன்னொரு பெண்ணை அவன் தொட்டு விடுகிறான். உடனே அவன் கவிஞனுக்கே களங்கமில்லை என்று பாடுகிறான். லண்டனிலிருந்து திரும்பிய முதலாளி, பாட்டை கேட்டார் ஓஹோ கவிஞனாக இருந்தால் எந்த பெண்ணையும் தொடலாமோ, பாட்டை மாத்துடா என்றார். பிறகு களங்கமில்லாத காதலிலே என்று மாற்றினோம் என குறிப்பிட்டிருக்கிறார்.