சினிமா

உங்க ஆசீர்வாதத்துல.. செம ஹேப்பியாக ரியோ சொன்ன சூப்பரான நியூஸ்! குஷியான ரசிகர்கள்!!

Summary:

பிரபல மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசி

பிரபல மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ரியோ. இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் ரியோ நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார்.

இதன்பின் அவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இதற்கிடையில் ரியோ பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் பிளான் பண்ணி பண்ணனும்  என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில், வீடியோவின் பிளான் பண்ணி பண்ணனும் படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி அனைத்து தியேட்டர்களிலும் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் எதிர்பார்ப்பில் இருந்த ரியோ ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்


Advertisement