இணையத்தில் வைரலாகி மாஸ் காட்டி வரும் ஐடி கார்டு.! செம கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!!

இணையத்தில் வைரலாகி மாஸ் காட்டி வரும் ஐடி கார்டு.! செம கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!!



pigil movie vijay id card viral

விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து  நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

மேலும் விஜய் 63 படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

vijay

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்திற்கு பிகில் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில்,இந்த  படத்தில் விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஐடி கார்டு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் விஜய் புகைப்படத்துடன் மைக்கேல், தலைமை பயிற்சியாளர் என்ற தகவலும்  குறிப்பிடப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.