சினிமா

சற்றுமுன் வெளியான பிகில் படத்தின் மாஸ் அப்டேட்! செம கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!!

Summary:

pigil movie new update released

விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து  நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

மேலும் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு பிகில் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

pigil movie க்கான பட முடிவு

இப்படத்தில் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் படத்தின் ட்ரைலர், ரிலீஸ் தேதி போன்ற அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில்  புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். 

அதில் தளபதி ரசிகர்களுக்காக புதிய தகவல் இன்று 6 மணிக்கு வரவுள்ளது.இந்த அப்டேட் வழக்கமாக வரும் சிங்கிள், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை.நமக்கு மிகவும் உற்சாகத்தை தரக்கூடியது.யோசித்து கொண்டே காத்திருங்கள் என பதிவிட்டிருந்தார்.இதனை தொடர்ந்து அவர் பிகில் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிகில் படத்தில் வெறித்தனம் என்ற பாடலை தளபதி விஜய் பாடவிருப்பதாகவும், அதற்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.


Advertisement