சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் தர்ஷனுக்கு இப்படியொரு கெட்ட குணமா? ரகசியத்தை போட்டுடைத்த பிரபலம்!!

Summary:

photoshoot joi alk about bigboss dharsan

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.  

தொடர்புடைய படம்

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் என்பவர் கலந்து கொண்டுள்ளார். இவர் மிகவும் கஷ்டப்படக் கூடிய வறுமையான குடும்பத்தில் இருந்து தீராத முயற்சியால் முன்னேறி வந்தவர். மேலும் தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் அன்புடன் பழக கூடியவர். மேலும் எவரைப் பற்றியும் புறம் பேசாமல்,  யார் வம்புக்கும் செல்லாமல் நேர்மையாக இருப்பவர். 

மேலும் வாழ்வில் பல மோசமான அனுபவங்களை பெற்று முன்னேறிய மாடல் தர்ஷன்  குறித்து அவரை  போட்டோஷூட் செய்த ஜோவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அப்பொழுது அவர் தர்ஷன் குழந்தையை போல மிகவும் நல்ல பையன். அவனை திட்டினால் உடனே அழுது விடுவான். அவனது கெட்ட குணம் என்னவென்றால் எல்லோரிடமும் அன்புடன் பழகுவது, அனைவரையும் நம்புவதுதான்.

sanam

 எனக்கு தர்ஷனை நடிகை சனம் ரெட்டி மூலமாகதான் தெரியும். அவர்தான் தர்ஷனை போட்டோஷூட் செய்ய வைத்தார். அதுமட்டுமின்றி தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல சனம் ரெட்டிதான் முக்கிய காரணம், அவர்தான் தர்சனுக்கு இந்த  வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் என கூறியுள்ளார். 


Advertisement