
petta-movie-second poster
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் ‘பேட்ட’. இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் நடிகர் ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில்,அந்த வகையில் இன்று பேட்ட திரைப்படத்தின் புகைப்படமானது வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்தது.இன்று மாலை 7 மணியளவில் வெளியானது.இந்த போஸ்டர் வெளியான சில மணித்துளிலக்களிலேயே ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது.
இந்தப் போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் அழகா தலைவர் இருக்கிறார்.இதுவரை பார்க்காத அளவில் பெரிய மீசையுடன் வேட்டி சட்டையோடு, சிரிப்புடன் கம்பீரமாக உள்ளார் பக்கா மாஸ் கிராமத்து ஆள் போல உள்ளார். ரசிகர்கள் போஸ்டர் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்தப் போஸ்டரைத் தொடர்ந்து படம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement