பேட்ட படத்தில் ரஜினியுடன் இணையும் இன்னொரு பிரபல நடிகர்...!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் பேட்ட. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு மேற்கு வாங்க மாநிலம் டார்ஜலிங் பகுதியில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடக்க இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் சசிகுமார் தற்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் சசிகுமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சசிகுமார் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
