புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
லியோ படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? தமிழக அரசு விடுத்த அதிரடி உத்தரவு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லியோ படம் நாளை உலகெங்கும் ரிலீசாக உள்ளது. மேலும் படத்தை நாளை முதல் 24 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம். சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, முதல் நாள் 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும்,9 மணி காட்சியை 7 மணிக்கு திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில் நீதிபதி 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்தார். மேலும் காலை 7 மணிக்கு திரையிடுவது குறித்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிடபட்டது.
இந்த நிலையில், லியோ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது எனவும், காலை 9 மணி காட்சிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபடுகிறது என உள்துறை செயலாளர் அமுதா கூறியுள்ளார்.