பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாவனி.. வைரலாகும் புகைப்படங்கள்.!
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பாவனி. முதன்முதலில் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்ட சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ஒரு சில நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்களின் மனதை வென்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளரான அமீர் என்பவரும் இவரும் காதலித்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில், சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் தற்போது திரைப்படங்கள் நடித்து வருகிறார் பாவனி. இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருந்து கொண்டிருக்கும் பொழுது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி அமீர் மற்றும் பாவனியின் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
மேலும் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் பாவனி பிறந்தநாள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.