அட அட... குக் வித் கோமாளி பவித்ராவிற்கு அடித்த அடுத்த அதிர்ஷ்டம்! அதுவும் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் பார்த்தீங்களா!!pavithra-next-movie-detail-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் பவித்ரா லட்சுமி. இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். பவித்ரா லட்சுமி, கோமாளியான புகழுடன் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டிகள் அனைவரையும் கவர்ந்து சிரிக்க வைத்தது.

பவித்ரா லட்சுமி இதற்குமுன் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.  மேலும் மாடலிங் மற்றும் சில குறும்படங்களிலும் நடித்து பிசியாக உள்ளார்.  இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் வர துவங்கியது.

pavithra

பவித்ரா ஏ.ஜி.எஸ் ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், காமெடி நடிகர் சதீஸ் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இதன் படபூஜை அண்மையில் தொடங்கி படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பவித்ரா நாயகியாக நடிக்கும் அடுத்த படம் குறித்து புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

அதாவது  அறிமுக இயக்குநர் இயக்கும் படமொன்றில் மதயானை கூட்டம், பரியேறும் பெருமாள் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் கதிருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.