குக் வித் கோமாளி பவித்ராவுக்கு என்ன ஆச்சு... வெளியான தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்!!Pavithra met with small accident

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா. அந்த சீசனில் புகழுடன் இவர் செய்த சேட்டைகள் அனைவரையும் ரசிக்க வைத்தது. பவித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே உங்களில் யார் பிரபு தேவா, மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

அதனை தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பவித்ரா ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் நாய் சேகர் என்ற படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி மலையாளம் படம் ஒன்றிலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். ஆனால் கடந்த சில வாரங்களாக எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவிடவில்லை. இது குறித்து ரசிகர்கள் கேட்டதற்கு பதிலளித்துள்ள பவித்ரா, ஒரு விபத்தில் சிக்கியதாகவும், பெரிதாக எந்த ஒரு காயமும் இல்லை என பதிவிட்டுள்ளார். 

தற்போது அந்த விபத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதாக தெரிவித்துள்ளார். எனவே புதிய புகைப்படங்கள் ஏதும் எடுக்கவில்லை என தனது வருத்தங்களை தெரிவித்த பவித்ரா சுவிசர்லாந்து மற்றும் பாரிசில் எடுத்த புகைப்படங்கள் மட்டுமே தற்போது உள்ளது கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும் என பதிவிட்டுள்ளார்.