அப்பாடா.. ஒரு வழியா போட்டுட்டேன்! குக் வித் கோமாளி பவித்ரா வெளியிட்ட புகைப்படம்! என்ன செய்துள்ளார் தெரியுமா?

அப்பாடா.. ஒரு வழியா போட்டுட்டேன்! குக் வித் கோமாளி பவித்ரா வெளியிட்ட புகைப்படம்! என்ன செய்துள்ளார் தெரியுமா?


pavithra-get-corono-vaccination

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றி, நாடு முழுவதும் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் இடையில் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக பெருமளவில் பரவி வருகிறது. மேலும் தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை உயிரிழக்கும் துயரமும் நேர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைவருக்கும் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபலங்கள் பலரும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்து பிரபலமான பவித்ரா லட்சுமியும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்த அவர், ஊசினா எனக்கு ரொம்ப காலமாகவே பயம்.  நிஜமாவே ரொம்ப பயந்துட்டேன். ஆனா ஒரு வழியாக தடுப்பூசி போட்டுட்டேன் என பதிவிட்டுள்ளார்.