சினிமா

அட.. சமந்தாவின் தங்கச்சியா இருப்பாங்களோ! அச்சு அசல் அவரை போலவே மாறிய குக் வித் கோமாளி பிரபலம்! செம்ம கியூட்ல!!

Summary:

தமிழ் சினிமாவில் விஜய்,சூர்யா, ஜீவா, தனுஷ், விக்ரம் என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து தற

தமிழ் சினிமாவில் விஜய்,சூர்யா, ஜீவா, தனுஷ், விக்ரம் என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் டாப் ஹீரோயினாக உள்ளார். திருமணத்திற்கு பிறகும் மார்க்கெட் குறையாமல் வலம் வரும் சமந்தா கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

நடிகை சமந்தாவிற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்கள் சமந்தாவின் புகைப்படம் ஏதேனும் வெளியானால் அதனை பெருமளவில் வைரலாக்குவர். இந்நிலையில் சமந்தாவை போலவே மாறியிருக்கும் குக் வித் கோமாளி பவித்ராவின் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பவித்ரா. செம க்யூட்டாக இருக்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர் தற்போது தெறி படத்தில் வரும் சமந்தாவை போலவே புடவை அணிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது அதனை கண்ட ரசிகர்கள் சமந்தாவின் தங்கச்சியா இருப்பாங்களோ? அவரை மாதிரியே இருக்காரே என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.


Advertisement