எஸ்.டி.ஆர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பத்து தல படக் குழு! மாஸ் அப்டேட் வெயிட்டிங்!

எஸ்.டி.ஆர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பத்து தல படக் குழு! மாஸ் அப்டேட் வெயிட்டிங்!


pathuthala-producer-tweet-sparks-excitement-among-simbu

மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பத்து தல'. இத்திரைப்படத்தை 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கிறார். மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவடைந்து இருக்கிறது.

இந்தப் படம் மார்ச் மாதம் 30-ம் தேதி  வெளியாக இருப்பதாக ஏற்கனவே பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. பிப்ரவரி மாதம் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்தப் பாடல் தற்போது வரை 7.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

simbu

மார்ச் மாதத்தில் பட வெளியீட்டிற்கு முன்பாக இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர் படக் குழு. தற்போது படத்திற்கான பிரமோஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் முக்கியமான ஒரு அப்டேட்டை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

simbuஅந்த அறிவிப்பின்படி 03.03.2023 அன்று பத்து தல திரைப்படத்தினை பற்றிய  புதிய அறிவிப்பினை வெளியிட உள்ளதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ரசிகர்களை  உற்சாகப்படுத்திருபதோடு அவர்களின் எதிர்பார்ப்பையும் ஏகிர செய்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் படத்தினைப் பற்றிய புதிய செய்திக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.