பிரபல நடிகர் அருகில் இருப்பதை கூட பாராமல் பொது நிகழ்ச்சியில் அவரை வெளுத்து வாங்கிய நடிகை! வைரலாகும் வீடியோ.

பிரபல நடிகர் அருகில் இருப்பதை கூட பாராமல் பொது நிகழ்ச்சியில் அவரை வெளுத்து வாங்கிய நடிகை! வைரலாகும் வீடியோ.


Parvathi vijay thevarakonda

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் படத்தின் மூலம் ஹுரோயினாக அறிமுகமானவர் நடிகை பார்வதி. இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர். ஆனால் இவர் முன்னணி நடிகையாக விளங்கவில்லை என்றாலும் நடித்த படங்களில் விருதுகளை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற பேட்டியில் அதாவது தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவரகொண்டா, ஆலியா பாட், பார்வதி மற்றும் விஜய் சேதுபதி ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தங்களது படத்தின் அனுபவத்தை பற்றி பேசியுள்ளனர்.

Parvathi

அதில் பேசிய பார்வதி விஜய் தேவரகொண்டா பக்கத்தில் இருப்பதை கூட கண்டு கொள்ளாமல் அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தை பற்றி இவ்வாறு பேசியுள்ளார். அதாவது சினிமா மூலம் பார்வையாளர்களை கவர்வது போன்ற படத்தை எடுக்க வேண்டும்.

ஆனால் அர்ஜுன் ரெட்டி படத்தில் காதலர்கள் கன்னத்தில் அடித்து கொள்ளும் காட்சியின் மூலம் பெண்களின் மனதில் வன்முறையை புகுத்துவது போன்று இருக்கிறது என ஓபனாக பேசியுள்ளார்.