" மாயவா.. தூயவாவிற்கு தேசிய விருது" பார்த்திபன் நெகிழ்ச்சி..

" மாயவா.. தூயவாவிற்கு தேசிய விருது" பார்த்திபன் நெகிழ்ச்சி..


Parthiban talking about national award

டெல்லியில் நேற்று 69ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தமிழில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த "இரவின் நிழல்" படத்தில் இடம்பெற்ற "மாயவா தூயவா" பாடலைப் பாடிய ஷ்ரேயா கோஷலுக்கு  தேசிய விருது கிடைத்துள்ளது.

Iravinnizhal

இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்," வணக்கம். மகிழ்வுடன் நான் பார்த்திபன், நிலவில் சந்திரயான் இறங்கியபோது, அதை தயாரித்த விஞ்ஞானிகள் மட்டுமின்றி, அங்கு வேலை செய்த அனைவருமே மகிழ்ந்திருப்பார்கள்.

அந்த மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் சற்றும் குறைந்ததல்ல இந்த தேசிய விருது மாயாவா தூயவா பாடலுக்கு கிடைத்திருப்பது. இந்தப் படத்தில் உழைத்த ஒரு ஊழியனாக நானும் பெருமை கொள்கிறேன் மகிழ்கிறேன்.

Iravinnizhal

ஏ .ஆர் .ரஹ்மானுடன் ஒரு படமாவது பண்ணவேண்டும் என்ற என் நீண்டகாலக் கனவு ' இரவின் நிழல் ' படம் மூலம் நிறைவேறியது. அவருக்கும், ஷ்ரேயா கோஷலுக்கும், மற்றும் படத்தில் உழைத்த அனைவர்க்கும் நன்றி. இப்படத்தின் மூல கர்த்தாக்கள் என் அமெரிக்கா வாழ் நண்பர்கள் தான் "என்று கூறியுள்ளார்.