விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பார்த்திபன்.. என்ன காரணம் தெரியுமா.?

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பார்த்திபன்.. என்ன காரணம் தெரியுமா.?


parthiban-sorry-to-vijay-fans

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக பெயர் பெற்றவர் பார்த்திபன். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் இவரின் திரைப்படங்கள் வித்தியாசமான கதைகளை கொண்டிருப்பதால் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.

parthiban

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் பார்த்திபன். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை திரைத்துறையில் நிலைநாட்டியுள்ளார்.


சமீபத்தில் 'பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்தப் படத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் பார்த்திபன்.

parthiban

இது போன்ற நிலையில், பார்த்திபனின் ரசிகர்கள் விஜயின் புகைப்படத்தை வைத்து முகத்தை மட்டும் AI மூலம் மாற்றி அப்புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த பார்த்திபன் ஆச்சரியத்தில் இப்படியெல்லாம் கூட பண்ணலாமா, விஜய் ரசிகர்கள் மண்ணிச்சிடுங்க என்று கூறி பதிவிட்டுள்ளார்.