சினிமா

அடேங்கப்பா.. வேற லெவல்தான்! பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் தங்கை என்ன தொழில் செய்கிறார் பார்த்தீர்களா!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு கூட்டுக் குடும்ப வாழ்க்கையை, அண்ணன்-தம்பி பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் ஸ்டாலின், சுஜித்தா, வெங்கட், ஹேமா, குமரன், காவியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கடைக்குட்டியாக, துறுதுறுவென இருக்கும் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவண விக்ரம். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் தற்போதுதான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருக்கென தனியாக லவ் ட்ராக் சென்று கொண்டுள்ளது.

இந்நிலையில் கண்ணன் தனது உண்மையான குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்ஸ்களை குவித்தது. மேலும் அவரது தங்கையை கண்டு ரசிகர்கள் பலரும் இவருக்கு இவ்வளவு அழகிய தங்கையா என  ஆச்சரியமடைந்தனர்.

 நடிகர் சரவண விக்ரமின் தங்கையின் பெயர் சூர்யாவாம். அவர் மிகப்பெரும் ஆடை வடிவமைப்பாளராம். இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றில் தனது தங்கை குறித்து வந்த செய்தியை மிகவும் பெருமையுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சரவண விக்ரம், தனது தங்கை மென்மேலும் வளர வாழ்த்து கூறியிருந்தார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


 


Advertisement