
என்னது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகுகிறாரா புதிய முல்லை! இதுதான் காரணமா? செம ஷாக்கில் ரசிகர்கள்..
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் மக்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர்களுள் ஒன்று பாண்டியன் ஸ்டோர். அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இந்த தொடரில் முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் விஜே சித்ரா.
அவர் ரசிகர்கள் மனதில் மாபெரும் இடத்தை பிடித்திருந்தார். இவர் கடந்த ஆண்டு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதனை தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணியாக நடித்து வந்த காவியா நடித்து வருகிறார். அவருக்கு தற்போது பாண்டியன் ஸ்டோர் தொடரில் நல்ல வரவேற்பு கிடைத்து அவர் பிரபலமாகிவிட்டார்.
இந்நிலையில் தற்போது காவியா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது லிப்ட் படத்தை தொடர்ந்து நடிகர் கவின் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பில் உருவாகவுள்ள ஊர் குருவி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா நடிக்கவுள்ளதாகவும், அதனால் அவர் தொடரிலிருந்து விலக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை.
Advertisement
Advertisement