BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு!! மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!
பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து அவர் சில சீரியல்களில் நடித்திருந்தார் மேலும் நடன ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகை சித்ரா தற்போது விஜய் தொலைக்காட்சியில் அண்ணன்-தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த தொடரில் நடித்ததற்கு பிறகு இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. மேலும் கதிர் மற்றும் முல்லை ஜோடிக்காகவே அந்த சீரியல் பார்ப்பவர்களும் உண்டு. மேலும் எப்பொழுதும் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் சித்ரா அவ்வபோது மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.
இந்நிலையில் நடிகை சித்ராவிற்கு எப்பொழுது திருமணம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தநிலையில், அவருக்கு நேற்று ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஹேமந்த் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். மேலும் அவர்கள் இருவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
