சினிமா

பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது! மாடர்ன் உடையில் என்னம்மா போஸ் குடுத்துருக்காங்க! சொக்கிப்போன ரசிகர்கள்!

Summary:

pandian store chitra photoshoot

 பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி, ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இத்தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சித்ரா. 

இவர் பல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் இருந்தார். இவ்வாறு சித்ரா தனது கலகலப்பான பேச்சால் ஏராளமான ரசிகர்களைப்  பெற்றுள்ளார்.

இவ்வாறு நடனம், நாடகம் என செம பிசியாக இருக்கும் சித்ரா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு சித்ரா மாடர்ன் உடையில் வேறுவேறு ரியாக்சனில் அழகிய போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர் முல்லையா இது என வாயடைத்து போயுள்ளனர்.


Advertisement