அடுத்த மாதம் திருமணம்! ஹோட்டல் அறையில் தனது முடிவை தேடிக்கொண்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை! மீளமுடியா அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த மாதம் திருமணம்! ஹோட்டல் அறையில் தனது முடிவை தேடிக்கொண்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை! மீளமுடியா அதிர்ச்சியில் ரசிகர்கள்!


pandian-store-chitra-commit-suicide

பல தொலைக்காட்சியில்   தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து அவர் ஏராளமான  சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் நடன ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகை சித்ரா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்த தொடரில் நடித்ததற்கு பிறகு இவருக்கென ஏராளமான ரசிகர்கள்  பட்டாளமே உருவாகினர்.  
இந்த  நிலையில் சித்ராவிற்கு கடந்த மாதம் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

chitra

இந்தநிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக ஷூட்டிங்கிற்கு சென்ற சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.