புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
விஜய் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி- காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. ப்ரேமம் படத்தில் இவர் நடித்திருந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தின் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் சாய் பல்லவி. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் நாயகியாக நடித்திருந்தார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தாலும் படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் மாபெரும் வெற்றிபெற்றது.
சூர்யா நடிப்பில் வெளியான NGK படத்திலும் நாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி.
இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா நடித்துள்ள டியர் காம்ரேட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியைதான் அணுகினார்கள் என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் முத்தக்காட்சியில் நடிக்க முடியாது என கூறி சாய் பல்லவி அதை நிராகரித்துவிட்டாராம்.
அதன் பின்னர் தான் ரஷ்மிகா ஹீரோயினாக தேர்வாகியுள்ளார்.