கலவரமான கல்யாண வீடு.! என்ன செய்யபோகிறார் பாக்யா! பரபரப்பு ப்ரமோ இதோ!!

கலவரமான கல்யாண வீடு.! என்ன செய்யபோகிறார் பாக்யா! பரபரப்பு ப்ரமோ இதோ!!


Pakialakshmi serial promo viral

விஜய் டிவியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. ஒரு இல்லத்தரசியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியலட்சுமியின் கணவராக நடிக்கும் கோபி மனைவிக்கு தெரியாமல் தனது காதலி ராதிகாவுடன் தொடர்புவைத்து பாக்கியாவை விவாகரத்து செய்ய திட்டமிடுவார்.

இதுகுறித்து பாக்கியாவிற்கு தெரியவந்தநிலையில் அவரே தைரியமாக கணவரை விவாகரத்து செய்கிறார்.பின்னர் பாக்யாவே குடும்பத்தை கவனிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். அதனால் சமையல் போட்டியில் கலந்து கொண்டு அதில் ஜெயித்து முதல் ஆர்டரையும் கைப்பற்றுகிறார்.

மேலும் தனது கணவர் மற்றும் ராதிகாவின் திருமணம் என தெரியாமலே அந்த ஆர்டரின் பேரில் சமைக்கிறார். இந்நிலையில் கோபி, ராதிகா திருமணம் நடக்குமா? என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது புதிய ப்ரமோ வெளியாகியுள்ளது.

அதில் கோபியின் அப்பா திருமண ரிஷப்சன் நடைபெறும் இடத்திற்கு வந்து சண்டை போடுகிறார். அவரை  வெளியே போயா என கோபி பிடித்து தள்ளுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியா கோபியிடம் தனது கோபத்தை காட்டிவிட்டு பின் தனது மாமனாரை அழைத்து செல்கிறார். பின்னர் நான் இந்த சமையல் ஆர்டரை நன்றாக செய்யவேண்டுமென எமோஷனலாக பேசுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.