ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி தொடரில் மாற்றப்பட்ட முக்கிய பிரபலம்.! யார்னு பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவரும் வகையில் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடித் திருப்பங்களுடன் செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்.
அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கதிர் மற்றும் முல்லை வீட்டை விட்டு வெளியேறி புதிய தொழிலை தொடங்கி கதைக்களத்தில் நிறைய திருப்பங்கள் வந்துள்ளது. அதேபோல பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா கணவன் கோபி ஏமாற்றுவதை அறிந்து அவரை விவாகரத்து செய்து வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார். அதனால் கதைக்களத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த இரு சீரியல்களிலும் முக்கிய மாற்றம் நடந்துள்ளது. அதாவது இரு சீரியல்களின் வசனம் எழுதுபவர் மாற்றப்பட்டுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு இனி சரவணன் என்பவரும், பாக்கியலட்சுமி தொடருக்கு பாரதி தம்பி என்பவரும் வசனம் எழுதவுள்ளனர்.