அடி தூள்... அரபிக் குத்து பாடலுக்கு மாடர்ன் உடையில் கலக்கல் நடனம் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...

அடி தூள்... அரபிக் குத்து பாடலுக்கு மாடர்ன் உடையில் கலக்கல் நடனம் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ...



paandian-stores-thanam-dance-video

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்பம், அண்ணன் தம்பி பாசம் போன்றவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன் மற்றும் காவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் தனம் என்ற கதாபாத்திரத்தில் தனது கணவரின் தம்பிகளை அம்மாவாக, பாசத்துடன் பார்த்துக்கொள்ளும் அண்ணியாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு சுஜிதாவும் ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம். 

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு மாடர்ன் உடையில் மாஸாக நடனமாடிய வீடியோ ஒன்றை தனது  இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..