என்ன வேணுனாலும் திட்டுங்க! கூலாக பதில் கூறும் ஓவியா! என்ன சொன்னாங்க தெரியுமா?

Oviya reaction about 90 ml movie trailer


oviya-reaction-about-90-ml-movie-trailer

களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனவர் நடிகை ஓவியா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் ஓவியா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பிறகு அதிக வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்ப முதல் இவரது பேச்சு, நடவடிக்கை , டான்ஸ் போன்றவற்றால் ரசிகர்கள் குவிந்தனர். ஒருகட்டத்தில் ஓவியா ஆர்மி அமைத்து ஓவியாவை கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

90 ml

இந்நிலையில் 90 ml என்ற புது படத்தில் நடித்துள்ளார் ஓவியா. 09 ml திரைப்படம் பெண்கள் சம்மந்தமான படமாக அமையும் என கூறப்பட்டது. பெண்கள் சம்மந்தமான படம் என்பதால் பெண்களின் போராட்டம், கஷ்டம் இவற்றை பற்றிய படமாக இருக்கும் என நினைத்தால் பயங்கர ஆபாசமாக, இரட்டை அர்த்த வசனங்கள், தண்ணி அடிப்பது, தம் அடிப்பது என பயங்கர மோசமாக உள்ளது அந்த படத்தின் ட்ரைலர்.

90 ml

இதனால் ஓவியா ரசிகர்கள் உட்பட தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் தலைவி ஓவியாவை சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றனர். ரசிகர்களின் திட்டையெல்லாம் காதில் வாங்கிகொல்லாமல் கூலாக ட்விட்டரில் பதில் கூறி வருகிறார் ஓவியா.

இந்நிலையில் தனது படம் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு நக்கலாக, மறுபடியும் ஒரு டபுள்மீனிங்கில் பதில் அளித்துள்ள ஓவியா ‘விதையை மட்டும் வைத்து எதையும் தீர்மானிக்காதீர்கள். முழுப் பழத்தையும் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு கமெண்ட் அடியுங்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தில்லாக பதில் அளித்திருக்கிறார்.