"உடலுறவு பற்றி வெளிப்படையாகப் பேசிய ஓவியா!" அதிர்ச்சியில் ரசிகர்கள்!Oviya openup about her relationship

2010ஆம் ஆண்டு :களவாணி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. இதையடுத்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானைக் கூட்டம், அகராதி, யாமிருக்க பயமே, புலிவால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஓவியா.

oviya

இந்நிலையில் ஓவியா 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிக் பாஸ் சீசன் 1" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். அவர் டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோசமான கதைகளில் நடித்து தனது பெயரைக் கெடுத்துக்கொண்டார். மேலும் மதுபான விடுதி ஒன்றில் மது அருந்திக்கொண்டே சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அதில் "நீங்கள் ஓரினச்சேர்க்கையாளரா?" என்று அவரிடம் கேட்கப்பட்டது. 

oviya

அதற்கு பதிலளித்த அவர், "நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது. நான் இயற்கைக்கு நேரான முறையில் தான் உடலுறவு வைத்திருக்கிறேன். ஓரினச்சேர்க்கை பற்றி நான் சிந்தித்தது கூட கிடையாது" என்று ஓவியா கூறியிருந்தார். இப்படி வெளிப்படையாக ஓவியா கூறியது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.