மீண்டும் ஒரு வீடியோவுடன் படம் வெளியாகும் தேதியை அறிவித்த ஓவியா! அதிகாலை காட்சிகளுக்கு அழைப்பு

மீண்டும் ஒரு வீடியோவுடன் படம் வெளியாகும் தேதியை அறிவித்த ஓவியா! அதிகாலை காட்சிகளுக்கு அழைப்பு


Oviya annouced the release date of 90ml

தணிக்கை குழுவால் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள 90ml படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. ஓவியா நடித்துள்ள இந்த படத்தினை அனிதா உதீப் இயக்கியுள்ளார். 

ஓவியா வெளிப்படையாக பேசக்கூடியவர், குழந்தைதனம் கொண்டவர் என்பதால் தான் பலர் அவருக்கு ரசிகர்களாக மாறி ஓவியா ஆர்மியெல்லாம் துவங்கினர். ஆனால் 90ml ட்ரெய்லரை பார்த்த சிலர், ஓவியாவின் ரசிகன் என்று சொல்வதற்கு நா கூசுகிறது என்று புலம்புகின்றனர். வெளிப்படையாக இருக்கலாம் ஆனால் இவ்வளவு வெளிப்படையாக இருக்கலாமா என கதறுகின்றனர். 

oviya

இதனைத் தொடர்ந்து படத்தினைப் பார்க்காமல் யாரும் எதையும் விமர்சிக்க வேண்டாம் என்ற அர்த்தத்தில் பதில் அளித்திருந்தார். 

இந்நிலையில் இன்று மீண்டும் ஒரு வீடியோவுடன் 90ml படம் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என ஓவியா பதிவிட்டுள்ளார். மேலும் அதிகாலை காட்சிகளுக்கு அனைத்து ரசிகர்களையும் எதிர்பார்பதாகவும் கூறியுள்ளார்.