சினிமா

மாஸ்டர் படத்தை அதிக விலைக்கு வாங்க திட்டமிடும் OTT நிறுவனம்.! தளபதி விஜய் கூறிய அதிரடி பதில்..!

Summary:

OTT plan to buy a master movie in high rate but vijay not give permission

மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் தான் மாஸ்டர். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலு‌ம் இப்படத்தில் ஹுரோயினாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலு‌ம் இப்படத்தில் ஆண்ட்ரியா, ஷாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மேலும் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகயிருந்தது ஆனால் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தால் திரைக்கு வராமல் தள்ளிபோயுள்ளது. 

இந்நிலையில் தற்போது இப்படத்தை மிகப்பெரிய விலைக்கு வாங்க OTT நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இது குறித்து தயாரிப்பாளர் நடிகர் விஜயிடம் பேசியுள்ளார். அதற்கு நடிகர் விஜய் நான் படம் பண்ணுவது ரசிகர்களுக்காக தான். அவர்கள் திரையில் கொண்டாடுவதற்காக மட்டும் தான். நீங்கள் இதை விட அதிக தொகை கொடுத்தாலும் வேண்டாம் என அதிரடியாக கூறியுள்ளார். 


Advertisement