தாறுமாறு கவர்ச்சி பேயாக மிரட்டும் சன்னி லியோன்! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

தாறுமாறு கவர்ச்சி பேயாக மிரட்டும் சன்னி லியோன்! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!


Oh my ghost first look poster released

பாலிவுட் மற்றும் கோலிவுட் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக கலக்கி வருபவர் கனடாவை சேர்ந்த பிரபல நடிகை சன்னி லியோன். ஆபாச படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் எக்கசக்கமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். அவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளிவந்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதனை தொடர்ந்து சன்னி லியோன்  வீரமாதேவி என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் அனாமிகா என்ற வெப்சீரிசிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சன்னி லியோன் 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சதீஷ், தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி. முத்து  உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில் ஓ மை கோஸ்ட் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுனர். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.