
NPK
அஜித், ஸ்ராதா, அபிராமி, ஆண்ட்ரியா, ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன் ஆகியோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ சிங்கப்பூரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடலான அகலாதேவில் அஜித் மற்றும் வித்யா பாலனின் ரொமாண்டிங் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் க்ளைமாக்ஸில் பைக் ஸ்டண்ட்டில் தெறிக்கவிட்டுள்ளார் தல அஜித். இந்த காட்சி அஜித் ரசிகர்களை கவர்வதற்காகவே கடைசியில் சேர்க்கப்பட்டுள்ளது போல. மற்றபடி கதையம்சம் முழுவதும் சற்றும் பிசிராமல் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தை அப்படியே வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர் வினோத்.
இரவு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு சிக்கலில் மாட்டிக்கொள்ளும் 3 இளம் பெண்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடும் கம்பீரமான வழக்கறிஞராக வலம் வருகிறார் அஜித். நீதிமன்ற காட்சிகளை மிகவும் விறுவிறுப்பாக எடுத்துள்ளார் இயக்குனர்.
படத்தை பார்த்த சிலர் பெண்களை பற்றி கொஞ்சம் மோசமாக பேசியிருந்தனர். அதைப்பார்த்த நடிகை வரலட்சுமி அந்த 3 பேரும் ஜெயிலில் கற்பழிக்கப்பட வேண்டும். அப்போது நாமும் சொல்லலாம், உங்களை பற்றி நாங்கள் கவலைப்பட தேவையில்லை. உங்களை பற்றி எங்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது. ஏனெனில் ரிவியூ என்ற பெயரில் நீங்களே உங்கள் வாயை விட்டு மாட்டிக்கொண்டீர்கள். தயவு செய்து உங்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
Advertisement
Advertisement