சினிமா

ஆஹா..! பலே பலே..! இப்படிப்பட்டவரை தான் திருமணம் செய்வேன்..! நிவேதா தாமஸ் போடும் ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்ஸ்.!

Summary:

Nivetha thomas talks about future husband qualities

தனக்கு வரவேண்டிய கணவர் எப்படி இருக்கவேண்டும் என பிரபல நடிகை நிவேதா தாமஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ். சின்னத்திரையில் நடித்துவந்த இவர் போராளி திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். பின்னர் நவீன சரஸ்வதி சபதம் என்ற திரைப்படம் மூலம் நாயகியாக அவதாரம் எடுத்தார்.

அதனை தொடர்ந்து பாபநாசம் படத்தில் கமலுக்கு மகள்,  ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கை என கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்துவந்த இவர் மலையாளம், தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக மாறினார்.

இந்நிலையில்தான் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் தர்பார் படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படி சினிமாவில் பிசியாக  வளம் வரும் இவர் தனது திருமணம், காதல், வருங்கால கணவர் குறித்த எதிர்பார்ப்புகளை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வாழ்க்கையில் எல்லோரும் காதலிக்க வேண்டும் என்ற அவசியமோ, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயமோ இல்லை. நான் நேரம் வரும்போது சந்தோஷமாக திருமணம் செய்து கொள்வேன். இப்போது எனக்கு திருமணம் பற்றிய எண்ணம் இல்லை. காதலிக்க நேரமும் இல்லை என கூறியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கவேண்டும் எனவும், எதிர்காலத்தில் இயக்குனராக வர ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

வருங்கால கணவர் குறித்து  கூறும்போது, வருங்கால கணவர் உண்மையாக இருக்கவேண்டும், உண்மை பேசுபவர்களைத்தான் எல்லோருக்கும் பிடிக்கும், நேரில் ஒருமாதிரி பேசுவது, ஆள் இல்லாதபோது வேறு மாதிரி பேசுவது பிடிக்காது. மேலும் தனது வருங்கால கணவர் தனது பொறுப்புகளை பகிர்ந்துகொள்பவராகவும், பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும் என நிவேதா தாமஸ் கூறியுள்ளார்.


Advertisement