அச்சோ.. "கியூட்டி டால்" நிவேதா தாமஸ்க்கு என்னாச்சு?.. திடீர்னு இப்படி ஆகிட்டாரே..! குழப்பத்தில் ரசிகர்கள்..!!Nivetha Thomas Looking abnormall

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக கலக்கி வருபவர் நிவேதா தாமஸ். இவர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு மகளாகவும், விஜய்க்கு தங்கையாகவும் நடித்து பிரபலமடைந்தார். சென்னையில் பிறந்திருந்தாலும் தமிழை விட, தெலுங்கு படங்களில்தான் நிவேதா தாமஸ் அதிகமாக நடித்துள்ளார்.

சமீபத்தில் அவரது நடிப்பில் "சாகினி தாகினி" என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்களால் "கியூட்டி டால்" என அழைக்கப்படும் இவர், தற்போது ஆளே மாறி அடையாளம் தெரியாமல் போயிருக்கிறார். முன்பு இருந்ததைவிட 2 மடங்கு உடல் எடை கூடி இருக்கிறார்.

Nivetha thomas

சமீபத்தில் இவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில், அவரைப் பார்த்த ரசிகர்கள் "என்ன இப்படி ஆகிவிட்டாரே? சுத்தமா அடையாளம் தெரியவில்லை" என்று பெருமூச்சுவிடுகிறார்கள். மேலும், ஒரு வேலை ஏதாவது புதிய படத்திற்காக உடல் எடை கூடி இருக்கிறாரோ? என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.